மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா? என்கிற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்தநிலையில் மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?”எனும் வாசகத்துடன் கூடிய டீ சர்ட் அணிந்தும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டும் நூதன முறையில் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட, தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நுழைவு வாயிலில் எய்ம்ஸ் மருத்துவமனை பணி தாமதப்படுத்துவதை கண்டித்து திமுகவினர் மரக்கன்றுகளை நட்டு நூதனப்போராட்டம் நடத்தினர். தோப்பூரில், 2018ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

 கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அடுத்து வந்த அதிமுக ஆட்சி  அந்த திட்டத்தை  சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக மாற்றியது. கடந்த 2015 ம் ஆண்டில் மாநிலம்தோறும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என அறிவித்தார் மோடி. அதன்படி மதுரையில் எயம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த மக்களவை  தேர்தலை மனதில் வைத்து,  தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மோடி அடிக்கல்நாட்டினார். ஆனால் இன்றுவரை நிதி ஒதுக்கவில்லை! 

இதனிடையே அமைச்சர் உதயக்குமார் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அறிவித்தார். மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எய்ம்ஸ் வந்தபாடில்லை. 
 தூத்துக்குடி எம்பி கனிமொழி நாடாளுமன்றத்தில்  எய்ம்ஸ் மதுரையில் வருமா வராதா? என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் சர்வதேச வங்கியிடம்  கடன் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் கிடைக்க வேண்டும். இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பான் குறிப்பிடும் காலக்கட்டத்தை பொறுத்தே மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதைக் கூற முடியும்" என்று கூறியுள்ளது வெட்ககேடாக அமைந்துள்ளது.