Asianet News TamilAsianet News Tamil

விரைவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திறக்க வாய்ப்பு..!! முதலமைச்சர் ஆய்வு செய்வார் என தகவல்..!!

திருப்பதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதை போல் கோவில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து அறிவிப்பார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

Madurai meenakshi amman temple will open very soon mla rajan chellappa says
Author
Chennai, First Published May 18, 2020, 2:26 PM IST

திருப்பதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதை போல் கோவில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து அறிவிப்பார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.  4 ம் கட்ட ஊரடங்கு காலமான மே 31ம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார் . மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை ,எளிய குடும்பத்தினருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை இலவசமாக மதுரை வடக்கு தொகுதி MLA வும் மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ராஜன்செல்லப்பா இன்று வழங்கினார்.

Madurai meenakshi amman temple will open very soon mla rajan chellappa says

இலவச உதவிகளை பெற வந்திருந்த மக்கள் அரசு கூறியுள்ள விதிகளின் படி சரியான சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்,அவர்கள் பொருள்களை பெற வரும்பொழுது கைகளில் கிருமி நாசினி தெளித்து  முக கவசம் அணிந்து போதிய பாதுகாப்புடன் பொருள்களை பெற்று சென்றனர். இதைத்  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா , மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி மாநில அரசு மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது .இந்நிலையில் அரசு அளித்துள்ள தளர்வுகளை மக்கள் விதிமுறைகளை கடைபிடித்து பயன்படுத்த வேண்டும் என கூறினார்.  

Madurai meenakshi amman temple will open very soon mla rajan chellappa says

 மேலும் திருப்பதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதை போல் கோவில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகள் குறித்து  தமிழக முதல்வர் ஆய்வு செய்து அறிவிப்பார் எனவும், 4ம் கட்ட ஊரடங்கு காலமான மே 31ம் தேதி வரையிலும் அம்மா உணவகங்களில் இலவச உணவு பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios