அதிமுக அமைச்சர்களில் தடாலடியாக பேசக்கூடியவர் பால்வளத்துறைத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. 1971ல் நடந்த பெரியார் பேரணி குறித்து நான் கற்பனையாக பேசவில்லை. இராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிந்தது உண்மை தான்.நான் சொன்னதில் தவறு கிடையாது என்று ரஜினிகாந்த் பேசியது தமிழகத்தில் பெரியாரிஸ்ட்கள் மத்தியில் பற்றிஎரியத் தொடங்கியது.


ரஜினியின் சர்ச்சைக்குறிய பேச்சை அனைத்து தரப்பினரும் கண்டித்தனர். அதிமுகவில் துணை முதல்வர் ஓபிஎஸ் அமைச்சர்கள் ஜெயக்குமார் செல்லூர் ராஜீ உள்ளிட்டவர்கள்  ரஜினிக்கு கண்ட குரல் எழுப்பியிருந்தார்கள். ஆனால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மட்டும் ரஜினி பேசியது தவறில்லை என்று ஆதரவு கரம் நீட்டி சப்போர்;ட் செய்திருந்தார்.
ஹலோ எப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும் போது..” பெரியார் செய்த புரட்சியை யாரும் குறை கூற முடியாது. அந்த காலத்தில் அதன் தேவை இருந்தது. அப்போது இருந்த சாதி மத ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து போராடி சமூக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார். இன்று தமிழகத்தில் அதுபோன்ற சூழ்நிலை இல்லை. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை ஒரு சில அரசியில் கட்சிகள் செய்வதனால் தான் ஆணவக்கொலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு காரணம்.


ரஜினி துக்ளக் பத்திரிகை விழாவில் பேசியதில் எந்த தவறும் இல்லை. நான் ரஜினியின் கருத்தை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். எங்கள் அமைச்சர்கள் யாரும் ரஜினிக்கு எதிராக பேசவில்லை.அறிவுரை தான் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் ஆன்மீக அரசியல் தான் மைய கருவியாக இருக்கும் என்றும் ஆன்மீகத்தை ஆதரிக்கும் அதிமுக தலைமையில் ஓர் அணியாகவும் இந்து கடவுள்களை இழிவுபடுத்து திமுக தலைமையிலான அதன் தோழமை கட்சிகள் ஒர் அணியாகவு இருக்கும். அதிமுக தலைமையிலான ஆன்மிக அணியை தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று பேசியுள்ளார் ராஜேந்திரபாலாஜி.


ரஜினி தலைமையில் ஆன்மீக அரசியலுக்கும் முதல் ஆளாக துண்டை போட்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அதிமுக ஆட்சி முடிந்ததும் . அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ரஜினியின் கட்சியில் இடம் பெறுவார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்கிறார் அவருக்கு நெருங்கிய நண்பர்கள்.

T Balamurukan