Asianet News TamilAsianet News Tamil

மதுரை திமுக எம்எல்ஏ மூர்த்தி செருப்பால் அடிக்க பாயும் வீடியோ.!! என்ன நடந்தது பாஜக சங்கர் பாண்டி பதில்.!!

மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ மூர்த்தி. பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் சங்கரபாண்டியை அவரது வீட்டிற்கு சென்று மிரட்டுவதோடு செருப்பை கழற்றி அடிக்க பாயும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Madurai DMK MLA Murthy Video What happened to BJP's Shankar Pandey?
Author
Madurai, First Published Jun 23, 2020, 9:35 AM IST

மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ மூர்த்தி. பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் சங்கரபாண்டியை அவரது வீட்டிற்கு சென்று மிரட்டுவதோடு செருப்பை கழற்றி அடிக்க பாயும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Madurai DMK MLA Murthy Video What happened to BJP's Shankar Pandey?
மதுரை மாவட்ட  புறநகர் திமுக மாவட்டச்செயலாளரும் கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமாக இருக்கு மூர்த்தி தனது கட்சிக்காரர்களை மட்டுமல்ல அனைவரையும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதில் கெட்டிக்காரர். இவர் வாய் திறந்தாலே அனைவரும் அமைதியாகி விடுவார்கள். அதே நேரத்தில் தன்னுடைய தொண்டர்களை அனைப்பதிலும் கெட்டிக்காரர். அதனால் தொண்டர்கள் இவர் என்ன பேசினாலும் கண்டுகொள்ளுவதில்லை. தன் கட்சித் தொண்டர்கள் என்ன பேசினாலும் பொறுத்துக்கொள்ளுவார்கள் மற்ற கட்சியினர் பொறுத்துக்கொள்ளுவார்களா? செருப்பால் அடிக்க பாய்ந்தால் யார் தான் பொருமையாக ஏசுநாதர் போல் இன்னொரு கன்னத்தையும் காட்டுவார்கள்?
என்ன நடந்தது என்று பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் சங்கரபாண்டியிடம் பேசினோம்.
சென்றவருசம் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிழக்கு தொகுதி எம்எல்ஏ மூர்த்தியின் ஊழல்கள் பற்றி தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கும் புகார் அனுப்பியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆடிட் செய்யப்பட்டது. திமுகவினரின் ஊழல்களை வெளிப்படுத்துவது ஒரு எதிர்கட்சியாக ஆரோக்கியமாக செய்து வருகிறேன். என்னுடைய ஃபேஸ்புக்கில் திமுக எம்எல்ஏ மூர்த்தியின் ஊழலும் திருட்டும் தொடர்கிறது என்று பேப்பரில் வந்த செய்தி இன்னொன்று ஆன்லைன்னில் வெளிவந்த செய்தியையும் டேக் செய்து திமுக ஐடி விங் திமுக தலைவர் ஸ்டாலின் இன்கம்டாக்ஸ் தமிழக முதல்வர் போன்றவர்களுக்கு எல்லாம் டேக் செய்திருந்தேன். நான் பாஜகவின் கிழக்கு தொகுதி பொறுப்பாளராக பணியாற்றி போது ஊமச்சிகுளத்தில் மூர்த்தி எம்எல்ஏவுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறேன். மதுரை புதூர் பகுதிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரும் போது முரசொலி அலுவலகத்திற்கு மூலப்பத்திரம் எங்கே என்று கருப்புக்கொடி காட்டியிருக்கிறேன்.

Madurai DMK MLA Murthy Video What happened to BJP's Shankar Pandey?
மதுரையில் பாஜக இளைஞர் அணி பொறுப்பாளர் என்கிற முறையில்  நான் குடியிருக்கும் கிழக்கு தொகுதியில் திமுக எம்எல்ஏ மூர்த்தி செய்யும் அனைத்து ஊழல்களையும் வெளிப்படுத்தி வருகிறேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. அவரைப்பற்றி எதுவுமே பேசக்கூடாது என்கிறார்.பாஜக எப்படி சும்மா இருக்கும். திமுக பாஜக வை பேசாமல் சும்மா இருக்கிறதா? அரசியல் கட்சிக்குள் ஆரோக்கியமான விவாதம் இருக்க வேண்டும். அதைவிடுத்து வீட்டிற்கு வந்து மிரட்டுவது. செருப்பால் அடிக்க பாய்வது எல்லாம் அராஜகம். என் மனைவி வழக்கறிஞர். அவர் வந்து எதுவாக இருந்தாலும் சட்டப்பூர்வமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். அதன் பிறகு என் வீட்டுக்கேட்டை திறந்துக்கொண்டு மனைவியை அசிங்கமாக பேசுகிறார் மூர்த்தி எம்எல்ஏ. அவர் கூட இருந்தவர்கள் அவரை இழுத்த பிறகு அமைதியாக போவது எல்லாம் எம்எல்ஏ மாவட்டச்செயலாளர் என்கிற அதிகார போதை ஆட்டம் போடுகிறார்.

 


கிழக்கு தொகுதியில் மூர்த்தியின் ஊழல்களை திமுக தலைமை கண்டிக்காதது தான் இதற்கு காரணம். என்னை மிரட்டி வீடியோ பதிவு 20 நிமிடங்கள் பதிவாகி இருக்கிறது. மதுரை எஸ்பியிடம் புகார் அளிக்க இருக்கிறோம் என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios