கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது. இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள். தாய்மார்கள், சகோதரிகள் அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்றார்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் புதிய திட்டங்கள் கொண்டு வர தமிழ்நாடு அரசின் அனுமதியை பெறாமல், கேரளா அரசு தனித்து முடிவெடுக்க முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி 10 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அதிமுகவில் சசிகலா விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நிலையில், சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது பற்றி அதிமுகவில் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. தேனி மாவட்ட அதிமுகவினர் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா , சசிகலாவை சந்தித்து பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து, உடனே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- என்மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை வீண்போகாது.. சசிகலாவால் அரண்டு மிரண்டு போன OPS,EPS.!

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் எந்த ஒரு திட்டமும் தொடங்கப்பட வேண்டும் என்றால், தமிழ்நாட்டினுடைய அனுமதி பெற்றுதான் தொடங்க முடியும். கேரள அரசின் இஷ்டம்போல் செயல்படுத்த முடியாது. இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள். தாய்மார்கள், சகோதரிகள் அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்றார்.
இதையும் படிங்க;- சி.வி.சண்முகம் பியூஸ் போன பல்பு என போட்டு தாக்கிய அதிமுக நிர்வாகிகள்.. அதிரடியாக நீக்கிய ஓபிஎஸ், இபிஎஸ்..!

பேட்டியின்போது செய்தியாளர்கள், சசிகலா அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்வியை கேட்டபோது, ''அய்யோ சாமி'' என்று கூறியபடி, ஓ.பன்னீர்செல்வம் அதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
