Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை ஒழிக்க கோளறு திருப்பதிகத்தை மனம் உருக பாடுங்கள்.. பொதுமக்களுக்கு மதுரை ஆதினம் யோசனை!

“நவக்கிரகங்கள் மூலம் ஏற்படும் துன்பங்களை நீக்கிடவும், பிளேக், காலரா, மலேரியா போன்ற தொற்று வியாதிகள் ஓடிச் சென்றிடவும், இந்திய-சீன யுத்தம் 1962-ம் ஆண்டில் நடந்தபோதும், புயல் மழை தொடர்ந்து பெய்து வெள்ளக்காடாக மாறிய போதும், திருஞான சம்பந்த பெருமான் பாடிய கோளறு திருப்பதிகத்தைப் பாடி மக்கள் நலம் பெற்று வாழ்ந்த வரலாற்று செய்திகள் உண்டு."
 

Madurai Aadhinam idea to sing kolaru thirupathigam against corona virus
Author
Madurai, First Published Apr 22, 2020, 8:37 PM IST

கொரோனா தொற்றுவியாதியிலிருந்து விடுபட அனைவரும் கோளறு திருப்பதிகத்தை மனம் உருக பாடும்படி மதுரை ஆதினம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.Madurai Aadhinam idea to sing kolaru thirupathigam against corona virus
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பீதியில் ஆழ்த்திவருகிறது. கொரோனாவை விரட்ட மாமிச உணவை கைவிட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட கோளறு திருப்பதிகம் வாசிக்கும்படி மதுரை ஆதினம் பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.Madurai Aadhinam idea to sing kolaru thirupathigam against corona virus
இதுதொடர்பாக மதுரை ஆதிஅம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவக்கிரகங்கள் மூலம் ஏற்படும் துன்பங்களை நீக்கிடவும், பிளேக், காலரா, மலேரியா போன்ற தொற்று வியாதிகள் ஓடிச் சென்றிடவும், இந்திய-சீன யுத்தம் 1962-ம் ஆண்டில் நடந்தபோதும், புயல் மழை தொடர்ந்து பெய்து வெள்ளக்காடாக மாறிய போதும், திருஞான சம்பந்த பெருமான் பாடிய கோளறு திருப்பதிகத்தைப் பாடி மக்கள் நலம் பெற்று வாழ்ந்த வரலாற்று செய்திகள் உண்டு.Madurai Aadhinam idea to sing kolaru thirupathigam against corona virus
இப்படிப்பட்ட பெருமையும், அருமையும் வாய்ந்த திருஞானசம்பந்தப் பெருமானின் கோளறு திருப்பதிகத்தை அனைவரும் மனம் உருகப் பாடி, சிவபெருமான்-பார்வதி தேவயின் பேரருளால்  ‘கொரோனா’வை’ முற்றிலும் ஒழிப்போம். நாம் நாட்டு மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios