ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை ஆதீனம் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். மதுரை ஆதீனம் தொடர்ந்து இதுபோல் பேசினாள் பதில் சொன்ன பல வகைகள் இருக்கின்றன என்றும் அமைச்சர் சேகர்பாபு எச்சரித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்றும், அதன் நடவடிக்கைகள் இந்து மதத்திற்கு எதிரானது என்றும் பாஜக உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மதுரை ஆதீனம் அரிகர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்ந்து திமுக அரசையும் அதன் நடவடிக்கைகளையும் விமர்சித்து வருகிறார். அவரின் பேச்சுக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஏற்பாட்டில் மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இந்து கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த விடுவிக்க வேண்டும் ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார், ஆதீனங்கள் மடாதிபதிகள் அரசியல் பேசக் கூடாது என்கிறார்கள் அப்படி என்றால் அரசியல்வாதிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? அறநிலையத்துறையை நீக்கி விட்டு நீதிபதி தலைமையில் குழு அமைத்து மடாதிபதிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். இந்துக்களை பாதுகாக்க அனைத்து ஆதீனங்களும், துறவிகளும் ஒன்று சேர வேண்டும் என்றார். கோவில்களுக்குள் அரசியல் புகுந்துவிட்டது, அரசியல்வாதிகள் கோவில்களில் தக்கார்களாக உள்ளனர். அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக கோவில்கள் மாறிவருகிறது. இந்து மக்கள் காசு போடாதீர்கள் என்றார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு திராவிட இயக்க பற்றாளர்கள் மாற்றம் தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் மதுரை ஆதினத்தின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் ஆதீனங்கள் அரசுக்கு ஆதரவாக இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க மதுரை அதிகம் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆதீனங்கள் சைவத்தைப் சேர்ந்தவர்கள், அசைவம் என்றாலே தமிழ், தமிழை பாதுகாக்கும் ஆட்சி முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி. மதுரை ஆதினம் தொடர்ந்து இதுபோல் பேசி வந்தால், பதில் சொல்ல பல வகைகள் இருக்கின்றன என்பதை அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். முதல்வரின் வழிகாட்டுதலால் நாங்கள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பதுங்கி இருப்பதை பயமாக கருதக்கூடாது, எங்களுக்கும் பாயத் தெரியும் மதுரை ஆதினம் அரசியல்வாதி போல பேசிக்கொண்டு இருப்பதை இந்து சமய அறநிலைத்துறை ஒரு போதும் அனுமதிக்காது. என அவர் எச்சரித்துள்ளார்.
