Asianet News TamilAsianet News Tamil

"தர்மயுத்தம் 2.0...." அவை தல மதுசூதனின் பலே ப்ளான் என்ன தெரியுமா?

Madhusoodhanan will be start dharmayuththam 2.0 soon
Madhusoodhanan will be start dharmayuththam 2.0 soon
Author
First Published Jan 10, 2018, 4:40 PM IST


தர்ம யுத்தம் நடத்திய பன்னீருக்கு துணை முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர், அவை முன்னவர் மற்றும் செல்லூர் ராஜுவின் சட்டமன்ற அலுவல் குழு பதவி என ஒட்டுமொத்தமாக கைப்பற்றிக்கொண்டதைப்போல தங்களுக்கு வாரியத் தலைவர் போன்ற ஏதாவது பதவி கிடைத்துவிடும் என்பதுதான் மதுசூதனனின் ப்ளானாம். அதனால் விரைவில் ஜெயலலிதா சமாதிக்கு விரைந்து தர்மயுத்தத்தின் 2-வது பாகம் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

Madhusoodhanan will be start dharmayuththam 2.0 soon

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனை எடப்பாடி அணியில் இருக்கும் எதிரியான ஜெயக்குமார் தான் தோற்க்க காரணம் இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும்  நம் தரப்பிலிருந்து நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம்  நடந்திருக்குமா? ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான தேர்தலில் வார்டு 38-ல் நான்கு பாகமும், 43-ல் ஐந்து பாகமுமாக 9 பாகங்கள் மந்திரி ஜெயகுமார் பொறுப்பில் கொடுத்தீர்களே... ஒன்பதாயிரத்து, 500 வாக்குகள் இருக்கிற இந்த இடத்தில் நாம் வாங்கிய வாக்குகள் வெறும் 1,800 தானே? அதை ஏன் என்று கேட்டீர்களா? மூத்த மந்திரி ஜெயகுமாரே இப்படி 'வேலையில் சுணக்கம்' காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா? என ஜெயக்குமார கட்டம் கட்டினார்.

Madhusoodhanan will be start dharmayuththam 2.0 soon

கட்சியில் ஒருங்கிணைப்பாளர், அவைத்தலைவர் என்ற இரண்டு பதவிகள். ஆட்சியில் துணைமுதல்வர், அவை முன்னவர், சட்டமன்ற அலுவல் குழு என முக்கிய பதவிகளை பறித்திருக்கும் நிலையில் இன்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து வந்தவர்களுக்குக் கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பும் கொடுக்கப்படாமல் இருக்கிறதே, வடசென்னை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் அதுதானே உண்மை நிலவரம். இதை காலங்கடந்து போய் இனிமேல்தான் சரி செய்யப் போகிறீர்களா மிஸ்டர் முதல்வர் அவர்களே? கழக இணை ஒருங்கிணைப்பாளர் அவர்களே ? நம்முடைய இயக்கம் விழுதுகளைத் தாங்கி நிற்கும் பேரியக்கம் என்று என்னைப் போல் பலர் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

Madhusoodhanan will be start dharmayuththam 2.0 soon

இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால்  'தன்னிச்சை' யாக நானே, கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்..." ( பன்னீர் தொடங்கியதைப்போல ஜெயலலிதா சமாதிக்கு சென்று தர்மயுத்தம் தொடங்கப்படும் என எடப்பாடியை எச்சரித்துள்ளதாக அர்த்தம் ) என எடப்பாடி அணியை மிரட்டியிருக்கிறார் அவை தல மதுசூதனன்.

Follow Us:
Download App:
  • android
  • ios