இருபது ரூபாய் கொடுத்து ஒரு முறை தான் ஏமாற்ற முடியும் என  
ஆர்.கே.நகரில் மீனவ மக்களுக்கு அரிசி வழங்கும் விழாவில்  மதுசூதனன்   பேசினார்.

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆகியோரது ஆணைக்கிணங்க வ.உ.சி.நகர் மீனவ கிராம நல சபையில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததற்கு நன்றி தெரிவித்து ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் திடலில்  ஊர்  பொதுமக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் கழக அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மற்றும் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர் கலந்து கொண்டு 1000-குடும்பங்களுக்கு தலா 10-கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை வழங்கினர்.

இதில் அவைத்தலைவர் மதுசூதனன் பேசிய போது.... ரவுடிகளை கொண்டு கல் எரியும் கேவலமான அரசியல் நடத்தும் தினகரன் எதோ தொகுதியில் இருபது ரூபாய் கொடுத்து வாக்காளர்களை ஒரு முறைதான் ஏமாற்ற முடியும். அதே போல,  தாய், தந்தை, யார்? என்றே தெரியாத குப்பைகள் எல்லாம் அறிக்கை வாசிக்கும் அவலநிலை அதிமுகவிற்க்கு இல்லை என பேசினார்.

மேலும் பேசிய அவர், இந்த இயக்கம் மறைந்த புனிதவதி அம்மா அவர்களின் இரும்பு கோட்டையாகவே திகழும் எனவும்,  எதிரிகளை அஸ்தமிக்கும் நேரம்  நெருங்கி விட்டது என தெரிவித்தார்.