எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும், அதே போல்தான் காஷ்மீர் விவகாரத்திலும் திமுக போராட்டம் அறிவித்துள்ளது’ எனக்கூறி தானாக வலையில் சிக்க இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் நாளை திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்கு எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு எதிரானதே தவிர காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை திமுக உணர மறுப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.  

பாகிஸ்தான் கொண்டாடும் தலைவனாக இருந்தால் அவர் இந்தியாவுக்கு அவர் துரோகம் செய்பவராகவே கருதப்படுவார். பாகிஸ்தான் மம்தாவை கொண்டாடுகிறது. மு.க.ஸ்டாலினை பாகிஸ்தான் முஸ்லீம்கள் பாராட்டுகிறார்கள். பாகிஸ்தானை சேர்ந்த செய்தி நிறுவனமான ரேடியோ பாகிஸ்தான், ஸ்டாலின் பற்றி செய்தி வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளது. ‘’ 2019 மக்களவை தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்த திமுக ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசாங்கம் எடுத்த முடிவை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளது’’ என செய்தி வெளியிட்டு உள்ளது. 

 

டெல்லியில் திமுக போராட்டம் நடத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக ஒரு தேசவிரோத கூடாரம் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இனி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியபோகிறது என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை என்று திமுக செய்தி தொடர்பாளர் ரிபப்ளிக் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சியின் நிலைப்பாடு இதுதானா? இது தேச துரோகம் இல்லையா? திமுக இதை அங்கீகரிக்கிறதா? என்றெல்லாம் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

 

திமுக போராட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது பாஜக.  இந்தியாவின் ஒருமை பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படும் மு.க.ஸ்டாலினை கண்டித்து காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை எனக் கூறும் திமுகவைக் கண்டித்தும் நாளை கோவையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.  அரசியல் நடத்துவதற்காக இந்திய இறையாண்மையை அடகு வைப்பதா? என திமுகவுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலினை இந்திய ரா உளவு அமைப்புகள், ராணுவ அமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் கண்காணித்து வருகின்றன.

 

நாளை அவர் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ள நிலையில் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் தானாக வலையில் சிக்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.