Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை... திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்?

திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

M.K.Stalin announces congress contest constituencies
Author
Chennai, First Published Mar 14, 2019, 9:35 AM IST

M.K.Stalin announces congress contest constituenciesதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. புதுச்சேரி நீங்கலாக 9 தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக திமுகவுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்திவந்தது. 
இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும்  புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்க முடிவானது. ஆனால், சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருச்சி, அரக்கோணம் தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் ஸ்டானிடம் பிடிவாதமாகப் பேசினார்கள்.
இதனையடுத்து அரக்கோணம், திருச்சி ஆகிய தொகுதிகளை  காங்கிரஸ் கட்சியிடம் திமுக கேட்டது. ஆனால், இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களே தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள் என்றும் திருச்சியில் திருநாவுக்கரசர் போட்டியிடப் போவதாகவும் காங்கிரஸ் தரப்பில் திமுகவிடம் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.M.K.Stalin announces congress contest constituencies
இதனையத்து திமுக நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், ஏற்கனவே வழங்கிய பட்டியலில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்ய காங்கிரஸிடம் கேட்டுக்கொண்டார். அதை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டது. இதன்படி ஏற்கனவே காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தேனி தொகுதியை காங்கிரஸ் விட்டுகொடுத்திருப்பதாகவும் அதற்கு பதில் சேலம் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றத்தின்படி திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, திருச்சி, சிவகங்கை, சேலம், விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு என முடிவாகியிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தி வருவதற்கு முன்பாக தொகுதி பட்டியல்களை வெளியிட திமுக முடிவு செய்திருந்தது. இதற்கிடையே ராகுல் காந்தி நேற்று தமிழகம் வந்ததால், திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் அறிவிப்பு வெளியாவது தள்ளிப்போனது.M.K.Stalin announces congress contest constituencies
இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பட்டியலுக்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios