" கரகாட்ட கோஷ்டியை காலாவதியாக்கிய ஸ்டாலின்" இபிஎஸ் ஒபிஎஸ்சை அசிங்கப்படுத்திய விஜய்.
பொம்மலாட்ட ஆட்சியை பொடிப்பொடியாக ஊதிவிட்டு, கரகாட்ட கோஷ்டியை காலாவதியாகிவிட்ட இபிஎஸ் ஓபிஎஸ் என எல்லோரையும் பீஸ் பீஸாக உடைத்துவிட்டு. இன்று பொறுப்பாக மட்டுமல்ல நெருப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பொம்மலாட்ட ஆட்சியை பொடிப்பொடியாக ஊதி, கரகாட்ட கோஷ்டியை காலாவதி ஆக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் என கவிஞர் பா.விஜய் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஓபிஎஸ் இபிஎஸ்சை கரகாட்ட கோஷ்டி என்றும் அவர்கள் செய்தது பொம்மலாட்ட ஆட்சி என்றும் அதை பீஸ் பீஸாக உடைத்தவர்தான் முதல்வர் ஸ்டாலின் என்றும் பா விஜய் பேசியுள்ளார்.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் திமுக என்ற கட்சி ஓபிஎஸ் இபிஎஸ்சின் தலைமையில் கீழ் இயங்கி வருகிறது. ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சிறைக்கு சென்று விட்டார். அன்று முதல் இன்று வரை அதிமுகவில் மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஸ்டாலின் முதல்வராகி விடக்கூடாது என்பதில் அதிமுக பாஜக பகீரத முயற்சியில் ஈடுபட்டு வந்தன. ஆனால் ஏராளமான கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தின் போது கொடுத்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் திமுக மீது இருந்து வருகிறது. இதேபோல் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஆனால் அது அனைத்தையும் சமாளிக்கும் வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஸ்டாலின் அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் 69வது பிறந்த நாளை அவரது கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், வழக்கறிஞர் அம்பத்தூர் பி.கே மூர்த்தி தலைமையில் புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்கள் பி.கே சேகர்பாபு மற்றும் 52 ஜோசப் சாமுவேல், நடிகர் போஸ் வெங்கட், திரைப்பட பாடலாசிரியர் பா விஜய், நடிகை சங்கீதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆட்சி நடத்தும் விதம் குறித்து பலரும் புகழ்ந்து மேடையில் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கவிஞர் பா. விஜய் பிறந்தநாள் வாழ்த்துப்பா வாசித்தார். அது அங்கிருந்தவர்களை உற்சாகம்மூட்டியது. அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- இது என்ன சாதாரண வெற்றியா, சுற்றிய இடமெல்லாம் கைப்பற்றிய இடமாகி வெற்றிகள் பெற வியர்வையின் தேடலாய் திசைகளெல்லாம் கலக்கின்ற எங்கள் திராவிடன் மாடலாய், இன்று தளபதியிடம் கலைஞருடைய ஆளுமை இருக்கிறது.
இரட்டை இலை என்னும் கேக்கை வெட்டி எதிர்த்து நின்ற மெழுகுவர்த்திகளை அடையாளம் தெரியாமல் ஊதி அனைத்து விட்டு பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நம்முடைய கழகத்தின் நிரந்தர இளைஞரான, இனமான தலைவர் ஸ்டாலின்.இன்னும் சொல்லப்போனால் தன்னுடைய ஜாதகத்தில் முதல்வராக கட்டமே இல்லை என கிளி ஜோசியம் பார்த்தவன் எல்லாம் கிலி பிடித்து போவதற்காக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று அவர் முரசறைந்த சத்தத்தில் அன்று ஆளுநர் மாளிகை மட்டும் அதிரவில்லை நேற்று ஆண்டவர்களின் மாளிகையிலும் இன்றும் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் தலைவர்.
பொம்மலாட்ட ஆட்சியை பொடிப்பொடியாக ஊதிவிட்டு, கரகாட்ட கோஷ்டியை காலாவதியாகிவிட்ட இபிஎஸ் ஓபிஎஸ் என எல்லோரையும் பீஸ் பீஸாக உடைத்துவிட்டு. இன்று பொறுப்பாக மட்டுமல்ல நெருப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன் என அவர் பேசியுள்ளார். அதிமுக ஆட்சியை பொம்மலாட்ட ஆட்சி என்றும் ஓபிஎஸ் இபிஎஸ்சை கரகாட்ட கோஷ்டி என்றும் விஜய் பேசியபோது அங்கிருந்த திமுகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.