தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வரும் 12-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழிசை பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள 4 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என தெரிவித்தார். 

மத்தியில் தாமரை மலரும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நிலைத்து இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் அதிக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலத்தில் எழுதும் சிலருக்கு மட்டும் அவர்கள் விருப்பப்படி வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

வரும் 23-ம் தேதி இந்தியாவே உற்று நோக்கி அளவிற்கு தேர்தல் முடிவுகள் இருக்கும். தமிழகத்தை பொறுத்தமட்டில் தாமரை மலரும்; கண்டிப்பாக தாமரை மலரும். இது தூத்துக்குடி கடலுக்கும் பொருந்தும். அங்கு நான் எம்பி ஆவேன். டெல்லியில் முடித்து விட்டு, வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய  செல்கிறேன். இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.