தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பாஜக பெற்று வருகிறது. தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும். டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் திமுக வெற்றி பெற்றது. 

டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் திமுக வெற்றி பெற்றது. ஆனால், தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளது என எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரி சட்டசப்பேரவை வரலாற்றில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட செல்வத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன்;- தமிழ் மண்ணில் பாஜகவைச் சேர்ந்தவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்துகளைத தெரிவிக்கிறேன். பாஜக தமிழகத்தில் வரவே முடியாது, தாமரை மலராது என்று சொன்னார்கள். தற்போது தமிழகத்தில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வந்துள்ளனர்.

தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பாஜக பெற்று வருகிறது. தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும். டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் திமுக வெற்றி பெற்றது. ஆனால், தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்துள்ளனர். கருத்துகளைச் சொல்பவர்கள் மீது வழக்குப் பதிவு என்பது கண்டிக்கத்தக்கது என எல்.முருகன் கூறியுள்ளார்.