சான்டியாகோ மார்ட்டின்!...கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேசிய அரசியலை சலசலக்க வைத்துக் கொண்டிருக்கும் பெயர் இது.
இந்தியாவின் பல மாநிலங்களிலும், அண்டை நாடுகளிலும் நல்ல மற்றும் கள்ள லாட்டரிகளை விற்று மில்லியன் கணக்கில் பணம் புரளும் நபர் இவர். தமிழகத்தில் கோயமுத்தூரை மையமாக வைத்து  குடும்பத்தைக் குடிவைத்துவிட்டு நாடு நாடக சுற்றிக் கொண்டும், ஜாக்பாட் பிஸ்னஸை வளர்த்துக் கொண்டும், வழக்குகளை சந்தித்துக் கொண்டும் இருக்கிறார். நாடெங்கிழும் இவருக்கு இருக்கும் சொத்துக்களின் மீது வருமான வரித்துறை ரெய்டு சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கோயமுத்தூரில் மார்ட்டின் நிறுவனத்தை சேர்ந்த அக்கவுண்டண்ட் பழனிசாமி என்பவர் மர்மமாக இறந்து போயிருக்கிறார். இந்த சாவினை ‘ரெய்டு நடத்திய அதிகாரிகளிடம் மார்ட்டினின் சொத்துக்கள் பற்றிய உண்மையை இவர் சொல்ல இருந்ததால் கம்பெனி தரப்பே அடித்து, அவர் கதையை முடித்துவிட்டது.’ என்று அவர் குடும்பத்தினர் கொதிக்கின்றனர்.

 

ஆனால், மார்ட்டின் தரப்போ ‘இல்லாத மர்மங்களை கேட்டு டார்ச்சர் செய்ததால் பழனிசாமி இறந்திருக்கிறார்.’ என்று அதிகாரிகள் மீது பாய்ந்திருக்கின்றனர். இப்படியோ அல்லது அப்படியோ எப்படி இருந்தாலும் இந்த மர்ம மரணம் மற்றும் ரெய்டில் கிடைத்த ஆவணங்களை வைத்து மார்ட்டினை வளைத்து, அமுக்கிட துடிக்கிறது பி.ஜே.பி. காரணம், மார்ட்டினை வளைப்பதன் மூலம் அவர் இப்போது அடைக்கலம் புகுந்ததோடு, அதி பிரம்மாண்டமாக ஸ்பான்சர் செய்து கொண்டிருக்கும் தி.மு.க.வையும் வளக்கலாம் என்பது பி.ஜே.பி.யின் எண்ணம். தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைப்பதற்கு சில இடங்கள் தேவைப்பட்டால், மார்ட்டினிடம் பிடிபட்டிருக்கும் விஷயங்களை வைத்து ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்து தங்களை ஆதரிக்க வைக்கலாம் என ஸ்கெட்ச் போட்டிருக்கிறது. 
 
ஆனால் இதை துல்லியமாக புரிந்து கொண்டு அதற்கேற்ப காய் நகர்த்தியிருக்கும் ஸ்டாலின், மார்ட்டினின் மனைவி லீமாவை டெல்லி வட்டாரத்தில் கில்லியாக சில வேலைகள் பார்க்க வைத்துள்ளார். அதாவது பி.ஜே.பி. தவிர்த்து சர்வ கட்சிகளில் இருக்கும் கிறுத்துவ மதத்தை சேர்ந்த மற்றும் முடிந்தால் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாஜி, சிட்டிங்  எம்.பி.க்களையும், தேர்தலில் போட்டியிட்டுவிட்டு ரிசல்டுக்கு எதிர்நோக்கி இருக்கும் மைனாரிட்டி மத எம்.பி.க்களையும் வளைத்து பேசியிருக்கிறார். 

பி.ஜே.பி.யின் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர்களை ஒருங்கிணைத்திருப்பதோடு, அதற்கு பிரதிபலனாக பெரிய அளவில் பல சலுகைளையும், சகாயங்களையும் செய்து தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார் லீமா.

தேர்தல் முடிவு வெளியாகி பி.ஜே.பி. சிக்கலில் இருக்கும்போது லீமாவின் இந்த மூவ் பல புதிய தலைவலிகளை மோடிக்கு உருவாக்கும். இதன் மூலம் தன்னை வளைக்க திட்டமிட்ட ஸ்டாலினுக்கு மோடியே செக் வைத்துள்ளார்! என்கின்றனர் விமர்சகர்கள்.