மக்களவை தேர்தல் உச்சம் தொட்டு வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஆர் கோயிலுக்கு வேட்பாளர்கள் அணிவகுத்து வருகின்றனர்.

 

திருவள்ளூர் மாட்டத்தில் உள்ள நாத்தமேடு பகுதியில் 2011ம் ஆண்டு கலைவாணன் என்பவர் எம்.ஜி.ஆர் கோயிலை கட்டி வணங்கி வருகிறார். இந்தக் கோயிலில் பக்திப்பாடல்களுக்கு பதிலாக எம்ஜிஆர் படத்தில் வரும் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படுகிறது. இங்கு அதிமுகவினர் மட்டுமப்பாது எதிர்கட்சியினரும் வந்து வழிபட்டு செல்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள், பிற வேண்டுதலுக்காகவும் வந்து செல்கின்றனர்.

சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் இருப்பதுபோல் எம்.ஜி.ஆர் கோயிலுக்கு 41 நாட்கள் விரதம் இருக்கின்றனர். பிற கடவுகளுக்கு உள்ள சம்பிரதாயங்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர் கோயில் வழிபாட்டிலும் கடைபிடிக்கின்றனர்.

இங்கு இரண்டு எம்ஜிஆர் சிலைகளும் அவர், ராமபுரம் வீட்டில் அவர் பயன்படுத்திய நாற்காலியும் உள்ளது. எம்ஜிஆர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து கலைவாணனின் மனைவியின் கனவில் எம்.ஜி.ஆர் வந்ததாகவும், அவர் கனவில் வரும்போது அவர் வருத்தமாக இருந்ததால் இந்த கோவில் கட்ட முடிவெடுத்ததாகவும் கலைவாணன் கூறியுள்ளார் கலைவானன் கூறியுள்ளார்.