திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுவதால் மக்களவை தேர்தலில் வி.ஐ.பி தொகுதியாக மாறிவிட்ட தூத்துக்குடியில் இன்னொரு வி.ஐ.பி வேட்பாளராக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. 

6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நாடார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளார்கள். தூத்துக்குடி மக்களவை தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடந்த இரு தேர்தல்களிலும், நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களே அதிமுக, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகின்றனர்.

 

கடந்த தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டியில் அதிமுகவின் நட்டர்ஜி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலின் வாக்குப் பதிவை கணக்கிட்டால் கிட்டதட்ட திமுக வெற்றி உறுதியாகி உள்ளதாகவே கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் பிரச்சனையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, ஆளும் தரப்புக்கு எதிராகவே கருத்து நிலவி வருகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தூத்துக்குடி தொகுதியை பாஜக பக்கம் இந்த தொகுதியை தள்ளிவிட பேச்சு நடைபெற்று வருகிறது. 

ஆனால் இந்த தொகுதியில் கனிமொழி போட்டியிடுவது உறுதியாவிட்ட நிலையில், இவர்களுக்கு பாஜக சார்பியல் யார் போட்டியைக் கொடுக்கும் வேட்பாளர் யார் என்று பார்க்கும் போது தமிழிசைக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடார் வாக்குகளை சரிசமமாக தமிழிசை பிரிக்கக்கூடும் என்பதால் அவரே வேட்பாளராகவே தேர்வு செய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதை உறுதி செய்யும் வகையில் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக போட்டியிட கேட்டுள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் நாளை பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிகவும் பங்கேற்கும் என நம்புகிறேன் என்று தமிழிசை கூறியுள்ளார்.