தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 1-ம் தேதி முதல் பொதுமுடக்கம் நீடிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 1-ம் தேதி முதல் பொதுமுடக்கம் நீடிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 8-ம் தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.