2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி பதவிகளை நிரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த முடியாது என திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார். 

இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ், மதிமுக, திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகள் தரப்பில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவேண்டும். இந்த மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலேயே ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தார். மேலும், உள்ளாட்சி தேர்தலை தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இதையும் படிங்க;- வரதட்சணை கொடுமை... தாயின் உடலை அனைத்தபடியே தூக்கில் தொங்கிய குழந்தை..!

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு திமுக வழக்கறிஞர் வில்சன் கூறுகையில், "உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டாலும் 2011 மக்கள் தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறினார். ஆனால், 1991-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- ஓடும் அரசு பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிகட்டிய இளைஞர்... வேலூரில் பரபரப்பு..!

முறையாக வார்டு வரையறை பணிகள் முடிந்த பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3 மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகளை முழுவதும் முடித்தபிறகு தேர்தலை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி தற்போதைய சூழலில் தமிழக அரசால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று கூறியுள்ளார். இதனால், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த தேதியில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.