உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்;- உள்ளாட்சி மன்றத்தேர்தலை அதிமுக ஆட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல், ஏதாவது சில காரணங்களைச் சொல்லி யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்களா?. தடைபெற்று அதை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு அதிமுக தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை என்றும் அப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை முதல்வர் கூறி வருகிறார். திமுக, தேர்தலை எந்த நேரமும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், புதிய மாவட்டங்களுக்கான வார்டு வரையறை இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். பட்டியலின மற்றும் பழங்குடியினர்களுக்கு இடஒதுக்கிடு முறையாக பின்பற்றப்பகிறதா? என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையத்தில் பலமுறை முறையிட்டும், அதனை வெளியிட தேர்தல் ஆணையம் முன்வரவில்லை என புகார் தெரிவித்த ஸ்டாலின், அதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதை வரவேற்பதாகவும், அதே வேளையில் தொகுதி வரையறை உள்ளிட்ட பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.