Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமல... அன்னந்தண்ணி உண்ணாமலே... #ஒத்த_ஓட்டு_பாஜக ..!

 #ஒத்த_ஓட்டு_பாஜக  என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
 

Local body election BJP bought single vote
Author
Tamil Nadu, First Published Oct 12, 2021, 4:21 PM IST

திமுக - பாஜக வாக்கு வித்தியாசத்தில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதிகாரிகள் சரியான அறிவிப்புகளை வெளியிடவில்லையென்றும் பாஜகவினர் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில்,  #ஒத்த_ஓட்டு_பாஜக  என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Local body election BJP bought single vote

அண்ணாமலையின் கொங்கு நாடு கனவுக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தனது படுதோல்வியின் மூலம் வேட்டு வைத்துள்ளார். பா.ஜ.க.,வின் எல்.முருகன் ஒன்றிய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபோது கொங்கு நாடு சர்ச்சை கிளப்பிவிடப்பட்டது. எல்.முருகன் வகித்துவந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பா.ஜ.க.,வினர் பலரும் கொங்கு நாடு பற்றி விவாதித்து வந்தனர். கொங்கு வட்டாரத்தில் பா.ஜ.கவிற்கு செல்வாக்கு இருப்பதுபோல அவர்களே நினைத்துக்கொண்டு கொங்கு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும் எனப் பேசிவந்தனர். தமிழகத்தில் மாநிலச் சீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக (கொங்கு நாடு) உருவாக்க வேண்டும் என பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.Local body election BJP bought single vote

இதன் உச்சமாக, அண்ணாமலையை வரவேற்கும் பேனரில் ‘கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே’ என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது. சமீபத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, “மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றிய பல திட்டங்கள் உள்ளாட்சிகளுக்கு போய்ச் சேர்ந்திருக்கிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

ஆனால், அவர்கள் செல்வாக்கு கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் அதே கொங்கு மண்டலத்தில், பா.ஜ.க இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருத்த அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.கவைச் சேர்ந்த கார்த்திக் போட்டியிட்டார். இவர் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத் தலைவராக உள்ளார்.

Local body election BJP bought single vote

வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க நிர்வாகி கார்த்திக்கிற்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேர் இருந்தும் ஒருவர்கூட கார்த்திக்கிற்கு வாக்களிக்காததுதான் உச்ச சோகம்.

Follow Us:
Download App:
  • android
  • ios