அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் பதாகைகளுடன் போராட்டம் நடத்த தயாராக இருந்தனர். அத்துடன் கருப்பு கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவிற்கு எதிர்ப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆவடி மத்திய ரிசர்வ் படை வளாக விருந்தினர் மாளிகையில் அவர் தங்கினார். இதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். அங்கு அமித்ஷாவுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வரவேற்றனர். பூங்கொத்து, சால்வை வழங்கினர். இதையடுத்து அவர் அங்கிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புறப்பட்டார்.

கைது

அப்போது, அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் பதாகைகளுடன் போராட்டம் நடத்த தயாராக இருந்தனர். அத்துடன் கருப்பு கொடி காட்டவும் அவர்கள் தயாராக இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கோரிமேடு காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லி விழுந்த உணவு

மேலும், தரமற்ற உணவு வழங்கிய போலீசாரை கண்டித்து அரசியல் கட்சியினர் காவல்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்கள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அந்த உணவகம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.