Asianet News TamilAsianet News Tamil

மதுக்கடைகள் திறந்துகிடக்குது.. கோயில்கள் மூன்று நாள் மூடிக்கிடக்குது... திமுக அரசை வாரும் வேலூர் இப்ராஹீம்.!

இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்படுகிறது என பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
 

Liquor stores will be open .. Temples will be closed for three days ... Vellore Ibrahim attacked DMK government.!
Author
Kodaikanal, First Published Sep 4, 2021, 9:34 AM IST

கொடைக்கானலில் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வாரத்தில் 3 நாட்களுக்கு இந்து வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது கேலிகூத்தாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.Liquor stores will be open .. Temples will be closed for three days ... Vellore Ibrahim attacked DMK government.!
தற்போதைய தமிழக அரசு, மாநில பாஜக நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை. அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினை விரைவில் சந்திக்க உள்ளேன். பொதுச் சொத்துக்கள், உள்கட்டமைப்புடன் கூடிய நிலங்களை தனியாருக்கு குத்தகைக்குதான் மத்திய அரசு விடுகிறது. அதை மத்திய அரசு தனியாருக்கு விற்கிறது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது கண்டனத்துக்குரியது.Liquor stores will be open .. Temples will be closed for three days ... Vellore Ibrahim attacked DMK government.!
சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை கொஞ்சம் பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி கடன் இருந்தது. அதை மத்திய அரசு செலுத்தி வருகிறது. விரைவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறையும்.” என்று வேலூர் இப்ராஹீம் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios