Asianet News TamilAsianet News Tamil

திமுகவினர் நடத்தும் மது ஆலைகள்... பாமக ராமதாஸ் கிடுக்குப்பிடி..!

திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக  2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Liquor plants run by the DMK says Ramadoss
Author
Tamil Nadu, First Published Feb 14, 2020, 11:59 AM IST

திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக  2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல!

தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது? என மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்- சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக  2016-ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்.Liquor plants run by the DMK says Ramadoss

ஜப்பானில் COVID-19 பரவி வரும் கப்பலில் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியரைமீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழில் பதில் டுவிட்டர் செய்த வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் அவர்களுக்கு நன்றி. கப்பலில் தவிக்கும் சொந்தங்கள் பத்திரமாக தாயகம் திரும்பும் நாளே மகிழ்ச்சியான நாள்’’ எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios