Like Sellor Raju - Dinakaran is one of the team
தமிழக அமைச்சர்களில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிகளவில் நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்பட்டவர். வைகை அணையை தெர்மக்கோல் போட்டு மூடியது அனைவராலும் கடும் விமர்சனம் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது சீன பத்திரிகைகள் கூட இது குறித்த படம் வெளியிட்டதாகவும் தெரிகிறது.
இவரைப்போல், வேறெந்த அமைச்சர்களும் செல்லூர் ராஜூ அளவுக்கு புகழ் பெற்றிருக்க முடியாது. இவர் கூறும் கருத்துக்களை, நெட்டிசன்கள் பல்வேறு வகையில் கலாய்த்து பதிவிட்டு வருவார்கள்.
நெட்டிசன்களால் கலாய்க்கப்படும் இவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் முக்கிய தூணாக இருப்பவர் செல்லூர் ராஜூ. அண்மையில் நடைபெற்ற செல்லூர் ராஜூ வீட்டு காதணி விழாகூட அதிக முக்கியத்துவம் பெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தைவிட செல்லூர் ராஜூவின் வீட்டு விழா கோலாகலமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக மக்களையும், நெட்டிசன்களையும் அதிகமாக பேச வைத்தவர் இவர். ஆனா விஷயம் இது இல்லங்க...! செல்லூர் ராஜூவைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர், டிடிவி தினகரன் அணியில் இருப்பதைப் பற்றியதுதான்.
கோத்தகிரியில், டிடிவி தினகரன் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தினகரன் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் உருவ ஒற்றுமையுடன் ஒருவரும் பங்கேற்றார். அவரைப் பார்த்தவர்கள், செல்லூர் ராஜூவின் க்ளோனிங் என்றே அழைத்தனர். மீடியாக்களும் அவரை ப்ளாஷ்களால் தெறிக்கவிட்டது.
தினகரன் கூட்டத்துக்கு வந்தவர்கள், அவரைப் பார்த்து, நீங்கள் செல்லூர் ராஜூவைப் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். அவரும், செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார்.
