Asianet News TamilAsianet News Tamil

சோஷியல் மீடியாவில் கப்சா... லயோலா கல்லூரி எந்தக் கருத்துக்கணிப்பையும் நடத்தல... அதிரடியாக அறிவித்த நிர்வாகம்!

லயோலா கல்லூரி 2021-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எந்த வகையிலும் கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

Lie on social media... Loyola College didn't conduct any poll... Management announced!
Author
Chennai, First Published Mar 23, 2021, 8:48 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் மக்களைச் சந்தித்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தமுறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் ஒவ்வொரு கட்சியும் தீவிரமாகச் செயலாற்றிவருகின்றன. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளதால், ஊடகங்களும் தனியார் அமைப்புகளும் கருத்துக் கணிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

Lie on social media... Loyola College didn't conduct any poll... Management announced!
இதில் லயோலா கல்லூரியும் கருத்துக்கணிப்பை நடத்தி வெளியிட்டதாகவும், அதில் திமுக மாபெரும் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டிருப்பதாகவும் சமூக ஊடங்களில் செய்தி பரப்பப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக லயோலா கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “லயோலா கல்லூரி 2021-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு எந்த வகையிலும் கருத்துக் கணிப்பு நடத்தவில்லை என்று இதன்மூலம் அறிவிக்கிறோம்.Lie on social media... Loyola College didn't conduct any poll... Management announced!
தேர்தல் போக்குகளைப் பற்றிய விமர்சனங்களை வழங்குவதில் கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்றாப் பணியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்தப் பங்களிப்பும் இல்லை. லயோலா கல்லூரி பெயரில் அறிக்கைகள் ஏதேனும் வழங்கப்பட்டால் ஊடக நண்பர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். லயோலா கல்லூரி பெயரைப் பயன்படுத்தும் தனிநபர்களையும் மன்றங்களையும் கடுமையாக எச்சரிக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios