Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவுக்கு எதிராக ஒன்றிணைவோம் வா.. பாஜகவுக்கு ஆப்புவைக்க ஸ்பீக் ஆப் இந்தியா.. கொக்கரிக்கும் கொரோனா அரசியல்.!

இந்திய மக்கள் எழுப்பும் குரலின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘ஸ்பீக் ஆப் இந்தியா‘என்ற பெயரில் சமூக ஊடகத்தில் காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. 

Let us unite against AIADMK .. Speak of India to woo BJP
Author
Tamil Nadu, First Published May 29, 2020, 11:15 AM IST

இந்திய மக்கள் எழுப்பும் குரலின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘ஸ்பீக் ஆப் இந்தியா‘என்ற பெயரில் சமூக ஊடகத்தில் காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் , ’’கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு மோசமான பொருளாதார பாதிப்பை சந்தித்து உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மக்களின் அழுகுரல் நாட்டில் உள்ள அனைவருக்கும் கேட்கிறது. ஆனால் மத்திய அரசின் காதுகளில் மட்டும் விழவில்லை. மக்களின் வேதனையும், துயரத்தையும் அரசு புரிந்து கொள்ளவில்லை.Let us unite against AIADMK .. Speak of India to woo BJP

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு வெறுங்கால்களுடன் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதியோ, மருத்துவ வசதியோ கிடைக்கவில்லை. சுதந்திரம் அடைந்த பிறகு இப்படி ஒரு துயரமான நிலையை நாடு இப்போதுதான் காண்கிறது.

வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக அங்கும் இங்குமாக சென்று தவிக்கிறார்கள். சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவற்கு பதிலாக நிதி உதவி செய்யுங்கள். அப்போதுதான் வேலைவாய்ப்புகளை பாதுகாத்து, நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Let us unite against AIADMK .. Speak of India to woo BJP

அதனால்தான் இந்திய மக்கள் எழுப்பும் குரலின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் ‘ஸ்பீக் ஆப் இந்தியா‘என்ற பெயரில் சமூக ஊடகத்தில் காங்கிரஸ் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. மக்களின் குரலை வலுப்படுத்த காங்கிரஸ் உதவும். மக்கள் இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். நெருக்கடியான இந்த காலகட்டத்தில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். Let us unite against AIADMK .. Speak of India to woo BJP

அனைவரும் ஒன்றிணைந்து நெருக்கடியான இந்த காலகட்டத்தில் இருந்து மீண்டு வருவோம்’’என அவர் தெரிவித்தார். ஏற்கெனவே தமிழகத்தில் ஒன்றிணைவோம் வா  என்கிற அமைப்பை உருவாக்கி திமுக ஆளும் அதிமுகவுக்கு எதிராக அரசியல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஸ்பீக் ஆப் இந்தியா என்கிற திட்டத்தை ஆரம்பித்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளது. கிட்டத்தட்ட ஒன்றிணைவோம் வா திட்டத்தின் காப்பியாகவே ஸ்பீக் ஆப் இந்தியா திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios