Asianet News TamilAsianet News Tamil

சட்டப்பேரவை நடக்கட்டும்... நீட் தேர்வு விவகாரத்தில் உரிய முடிவு... அன்பில் மகேஷ் தடாலடி..!

நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை கூடும்போது உரிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 

Let the legislature start... The appropriate decision in the matter of NEET exam... Anbil mahesh says..!
Author
Chennai, First Published May 25, 2021, 10:01 PM IST

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்கத் தனியாகக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது என்பதுதான் நமமுடைய கொள்கை ஆகும். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதுபோல எப்போதுமே நாம் நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்தான். கண்டிப்பாக நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்.Let the legislature start... The appropriate decision in the matter of NEET exam... Anbil mahesh says..!
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவை கூடும்போது இதுகுறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உரிய முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் பிளஸ் டூ வகுப்புப் பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை வழக்கமான தேர்வு முறையே பின்பற்றப்படும். தேர்வு நேரம் குறைப்பு, விரிவான பதில் அளிப்பது போன்றவை எதுவும் மாற்றப்படமாட்டாது. மத்திய அரசு ஆலோசனை நடத்தியபோதும் இதையேதான் சொன்னோ. பிற மாநிலங்களும் இதைத்தான் தெரிவித்தன. எனினும், தேர்வுகளைப் பாதுகாப்பாக நடத்த வேண்டியது அரசின் பொறுப்பு ஆகும்.Let the legislature start... The appropriate decision in the matter of NEET exam... Anbil mahesh says..!
தமிழகத்தில் பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்படும். பிறகே இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்” என்றி அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios