Asianet News TamilAsianet News Tamil

4 மாநகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி முன்னிலை.. ஈடுகொடுக்க முடியாமல் காங் திணறல். கேரள உள்ளாட்சி தேர்தல் அதிரடி

இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், கன்னூர், கோழிக்கோடு ஆகிய நான்கு மாநகராட்சிகளில் ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

Left wing alliance leads in 4 corporations. congress struggle,  Kerala Local Election Action
Author
Chennai, First Published Dec 16, 2020, 11:08 AM IST

திருவனந்தபுரம், கொல்லம், கன்னூர், கோழிக்கோடு ஆகிய நான்கு மாநகராட்சிகளில் ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 

கேரள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி  தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி என மூன்று கட்சிகளும்  தேர்தலில் களமிறங்கியிருந்த நிலையில், மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் 941 கிராம ஊராட்சி, 152 ஊராட்சி ஒன்றியம், 14 மாவட்ட ஊராட்சி, 86 நகராட்சி, 6 மாநகராட்சி ஆகிய 1199 உள்ளாட்சி  அமைப்புகளின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வாக்குபதிவு கடந்த 8, 10, 14 ஆகிய  தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் சராசரியாக 77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றது. 

Left wing alliance leads in 4 corporations. congress struggle,  Kerala Local Election Action

புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகள் டிசம்பர் 21ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என  மாநில தேர்தல் ஆணையர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலையில் வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் துவங்கியது. மொத்தம் 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது, காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அதில் காங்கிரஸ் கூட்டணி முன்னணிலை பெற்றது. அதேபோல் மாநகராட்சிகளில் இடது முன்னணி முன்னணி வகிப்பதாகவும், கிராமப் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகவுப் தகவல் வெளியானது. 

Left wing alliance leads in 4 corporations. congress struggle,  Kerala Local Election Action  

இந்நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், கன்னூர், கோழிக்கோடு ஆகிய நான்கு மாநகராட்சிகளில் ஆளும் கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய உடன் தபால் வாக்குகளில் முன்னணி பெற்ற காங்கிரஸ்,முஸ்லிம் லீக் கட்சிகள் உள்ளடங்கிய ஐக்கிய ஜனநாயக கூட்டணி, தற்போது  இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதே நேரத்தில் இந்த முறை அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம் என சவால் விடுத்த பாஜக ஏற்கனவே தாங்கள் கைப்பற்றிய ஒரு சில இடங்களில் கூட பின்தங்கியுள்ளது, ஆனால் பாலக்காடு நகராட்சியில் மட்டும் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது இது பாஜக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios