Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்த் காலில் கிடக்கும் தலைவர்கள் கார்ட்டூன்.. இதுக்காகத்தான் வெளியிட்டேன் என எல்.கே. சுதிஷ் விளக்கம்..!

தேமுதிக  துணைச் செயலாளர் எல்.கே. சுதிஷ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கார்ட்டூன் படத்தை நீக்கியதோடு அதுகுறித்து விளக்கமும் தெரிவித்துள்ளார். 

Leaders lying at Vijaykanth's feet Cartoon ... Why did I publish it? Sudish Description ..!
Author
Chennai, First Published Sep 3, 2020, 8:40 PM IST

Leaders lying at Vijaykanth's feet Cartoon ... Why did I publish it? Sudish Description ..!

தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் தன்னுடைய ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் காலில் மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் காலில் விழுந்துகிடப்பதுபோல அந்த கார்ட்டூனில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மஞ்சள்  துண்டு அணிந்து ஒருவர் காலில் விழுந்து கிடப்பது போலவும் உள்ளது. அது மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை நினைவுப்படுத்துவதால், இந்த கார்ட்டூனைக் கண்ட திமுகவினர் கொதிப்படைந்தனர். அரசியல் வட்டாரத்திலும் இந்த கார்ட்டூன் படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.Leaders lying at Vijaykanth's feet Cartoon ... Why did I publish it? Sudish Description ..!
இந்நிலையில் இந்த கார்ட்டூன் படத்தை எல்.கே. சுதிஷ் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய பக்கங்களிருந்து நீக்கினார். இதுதொடர்பாக எல்.கே. சுதிஷ் விளக்கமும் அளித்துள்ளார். அதில், “அரசியல் கட்சி தலைவர்களை அவமானப்படுத்தும் வகையில் இந்த கார்ட்டூனை முகநூல் பக்கத்தில் பதியவில்லை. இது 2016-ல் தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனைதான் தற்போது முகநூலில் பதிவிட்டேன். அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதைபோல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன். அது தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்” என்று  எல்.கே. சுதிஷ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios