ஊழலை பற்றி பேச சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு தகுதி இல்லை... இறங்கி அடிக்கும் இபிஎஸ்..

கோவை டிஐஜி விஜயகுமாரின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும். இவரின் தற்கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதிமுக ஆட்சியில் காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Law Minister ragupathy is not qualified to talk about corruption... edappadi palanisamy

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையலத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கோவை சரக டிஐஜியாக இருந்த மறைந்த விஜயகுமார்  திறமையான  மற்றும் நேர்மையான அதிகாரி. விஜயகுமாரின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும். இவரின் தற்கொலை சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதிமுக ஆட்சியில் காவலர்களின் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- திமுக விதித்த நிபந்தனைகளை பார்த்தால் 80% குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது.. அண்ணாமலை பகீர்.!

Law Minister ragupathy is not qualified to talk about corruption... edappadi palanisamy

ஆனால், காவலர் நல்வாழ்வு திட்டத்தினை தற்போதைய ஆளும் திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசு இனியாவது மன அழுத்தம் ஏற்பட்டால் ஓய்வு வழங்க வேண்டும். காவலர் நல்வாழ்வு திட்டத்தை தமிழக அரசு மீண்டும் துவங்க வேண்டும்.மன அழுத்தம் உள்ள ஒருவருக்கு பணி வழங்கியதால் தான் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு சென்றுள்ளார் .

Law Minister ragupathy is not qualified to talk about corruption... edappadi palanisamy

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான திமுக அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் குறித்து பேச தகுதியில்லை. சட்ட அமைச்சர் ரகுபதி மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள அமைச்சர் ரகுபதி வசம் சட்டத்துறை இருப்பதே தவறு. ஊழல் செய்த திமுக அமைச்சர் ரகுபதிக்கு ஊழல் தடுப்பு பிரிவு கொடுக்கப்பட்டது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க;-  அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற துடிக்கும் ஆளுநர்! இவர்கள்தான் ஊழல் ஒழிப்பை பற்றி வாய் கிழிய பேசுகிறார்! முரசொலி

Law Minister ragupathy is not qualified to talk about corruption... edappadi palanisamy

ஆளுநர் ஏன் டெல்லி சென்றார் என்பது பற்றி எனக்கு தெரியாது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். உதயநிதி ஸ்டாலின் தான் பாஜகவின் அடிமை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை கண்டு திமுக நடுங்குகிறது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios