Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவரா போச்சு.. இதற்கு கூட்டு பாலியல் சம்பவமே சாட்சி.. விஜயகாந்த்.!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

Law and order has deteriorated in Tamil Nadu... Vijayakanth
Author
Tamil Nadu, First Published Mar 25, 2022, 11:56 AM IST

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போன்று விருதுநகர் மற்றும் வேலூரில் நடந்துள்ள கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மனதை உலுக்குகிறது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

கொதிக்கும் விஜயகாந்த் 

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்: விருதுநகர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவரை 2 சிறுவர் உட்பட 5 பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக்கேட்டு வருத்தம் அடைந்தேன்.

Law and order has deteriorated in Tamil Nadu... Vijayakanth

 சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினமும் நடந்து வருவது கடும் கண்டனத்துக்குரியது. நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போன்று விருதுநகர் மற்றும் வேலூரில் நடந்துள்ள கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் மனதை உலுக்குகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். 

Law and order has deteriorated in Tamil Nadu... Vijayakanth

 அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது

இதன்மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடத்தில் பாலியல் ரீதியாக நிகழும் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பெண்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் என போற்றப்படும் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது என விஜயகாந்த் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios