Asianet News TamilAsianet News Tamil

இலங்கை தமிழர்களும் இந்துக்கள்தான், அவர்களையும் சேர்த்துக்குங்க ஜி..!! அமித்ஷாவுக்கு இடித்துரைத்த பிரபல சாமியார்..!!

 இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில்  வாழ்ந்து வரும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றி இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் 

Lankan Tamil's also Hindus kindly consider for citizenship them  - sri sri ravishanka prasad
Author
Delhi, First Published Dec 10, 2019, 3:14 PM IST

குடியுரிமை திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .  இச் சட்டத்தில் ,  மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகிவரும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் , ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது .  இந்நிலையில் பல ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக தனது உள்ள ஈழத்தமிழர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும்  மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Lankan Tamil's also Hindus kindly consider for citizenship them  - sri sri ravishanka prasad

இந்நிலையில் அவர்களும்  மத துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள்தான என கருதி அவர்களுக்கும் இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது .  இலங்கையில் நடந்தது இன ரீதியான பாதிப்பு என்றாலும் கூட,  சிங்களர்கள் பௌத்தர்களாக இருப்பதனால்  தமிழர்க்கள்   இந்துக்கள் என்ற காரணத்திற்காகவே இலங்கையில்  தாக்கப்படுகிறார்கள் அதன் அடிப்படையிலேயே பல லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவில் வாழ்கின்றனர் . எனவே அவர்களையும் இஸ்லாமியர்களையும்  இந்த மசோதாவில் இணைக்க வேண்டும் என்று திமுக அதிமுக கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  

Lankan Tamil's also Hindus kindly consider for citizenship them  - sri sri ravishanka prasad

இந்நிலையில் பாஜகவின் ஆதரவாளரும் இந்துமத  துறவியுமான வாழும் கலைகள் அமைப்பின்  பிரபல சாமியார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்தியாவில் வாழும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் .  அதில் இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் உள்ளனர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில்  வாழ்ந்து வரும் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றி இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் .  அவரின் கோரிக்கை மத்திய அரசு பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios