இலங்கை கடற்படையால்பிடித்து வைக்கப்பட்டுள்ள  இந்தியாவுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச தெரிவித்துள்ளார்.   இலங்கை என்றால் ஈழத்தமிழர்களும்,  மீனவர்களும் தான் நினைவுக்கு நம் நினைவுக்கு வருவார். அந்தளவிற்கு தமிழர்களுக்கு எதிரான நாடாக உள்ளது இலங்கை. விடுதலை புலிகளுக்கு எதிராக  போர் நடத்தி அதில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை கொன்று  குவித்துள்ளது இலங்கை. 

அத்துடன் கடல் எல்லையில் அத்துமீறி விட்டதாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்தி,  வலைகளை அறுத்து  படகுகளை சிறைப்பிடித்து  அராஜகம் செய்துவது இலங்கையின் வாடிக்கையாக இருந்துவருகிறது.  பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு  இடையிடையே பேச்சுவார்த்தைகள்  நடத்தி அவ்வப்போது படங்கள் மீட்கப்பட்டது வருகின்றன.  இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகி உள்ளது கோத்தபய ராஜபக்சே,  அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.  இந்நிலையில் அவருக்கு இந்திய குடியரசு மாளிகைகள் இந்திய பிரதமர் மோடி,  மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கோத்தபாயவைவரவேற்றனர். 

பின்னர்,  ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு கொடுக்கப்பட்டது.  பின்னர் மோடியை சந்தித்து,  இருவரும் கலந்துரையாடினார்.  அதன் பிறகு பேசிய கோத்தபயா,  இந்தியா இலங்கை தொடர்பான பல்வேறு விஷயங்கள்  விவாதித்தோம் ,  அதில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தோம் , இலங்கையின்  காவலில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.