பதற வைக்கும் பாரிவேந்தர்... தொகுதி மாறும் விஜயகாந்த் மைத்துனர்..?

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதியை மாற்றி போட்டியிரும் முடிவில் இருக்கிறார் சுதீஷ்.

L K Sudhish may contestin Virudhunagar

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொகுதியை மாற்றி போட்டியிரும் முடிவில் இருக்கிறார் சுதீஷ்.L K Sudhish may contestin Virudhunagar

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கப்படும் என  தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷ் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் அவர் விருதுநகர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம் கள்ளக்குறிச்சியில் திமுக கூட்டணியில் உள்ள ஐஜேகே கட்சி சார்பில் பாரிவேந்தர் போட்டியிட இருக்கிறார். இந்த முறை எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கும் அவர், பணத்தைப் வாரி வாரி வழங்க முடிவெடுத்து இருக்கிறார். அவரது பணம் திமுகவின் வாக்கு வங்கியை வைத்து கடும் நெருக்கடி கொடுக்கப்படும் எனக் கருதும் சுதீஷ் அவரது சமூகத்தினர் அதிகம் வசிக்கும் விருதுநகரில் போட்டியிட்டால் எளிதாக வென்று விடலாம் என நம்புகிறாராம்.

 L K Sudhish may contestin Virudhunagar

இதனால் விருதுநகர் தொகுதியை கண்டிப்பாக பெறுவதற்கு தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேவேளை கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி, திருச்சி அல்லது விருதுநகர் தொகுதிகளை, தேமுதிக, கேட்டு வருகிறது. ஆனால், கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், வடசென்னை, திருவள்ளூர் தனி ஆகிய தொகுதிகளை ஒதுக்க, அதிமுக, திட்டமிட்டுள்ளது.

 L K Sudhish may contestin Virudhunagar

தேமுதிக, வேட்பாளர்களுக்கான நேர்காணல், அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் முன்னிலையில் நாளை நடைபெற உள்ளது.  தேமுதிக, தலைவர் விஜயகாந்த், ஒரே நாளில் நேர்காணலை நடத்துகிறார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios