Asianet News TamilAsianet News Tamil

’முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் மேனகா காந்தியை சும்மா வேடிக்கை பார்ப்பதா?’...குஷ்பு காட்டம்...

மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முஸ்லிம் வாக்காளர்கள் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

kushboo speaks against menaka gandhi
Author
Chennai, First Published Apr 13, 2019, 4:39 PM IST

மத்திய அமைச்சர் மேனகா காந்தி சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முஸ்லிம் வாக்காளர்கள் பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கோரிக்கைகளைப் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என்ற தொனியில் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.kushboo speaks against menaka gandhi

 துரப் கானி கிராமத்தில் ஏப்ரல் 11ஆம் தேதியன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேனகா காந்தி அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் பேசுகையில், “இத்தேர்தல் மிக முக்கியமானது. நான் நிச்சயமாக வெற்றிபெறுவேன். மக்களின் அன்பு, ஆதரவால் நான் வெற்றிபெறுவேன். ஆனால் என் வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லையெனில் எனக்கு மகிழ்ச்சி இருக்காது. எல்லாமே கொடுக்கல் வாங்கல்தான்.. வாக்களித்தால் உங்களுக்குச் செய்வோம்... இல்லையேல்..என்று தொடர்ந்து மிரட்டும் தொனியிலேயே பேசியிருந்தார்.

மேனகாவின் அந்தப் பேச்சைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கடுமையாக சாடி வருகிறார்கள். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''இதுதான் எல்லை. பாஜக வெளிப்படையாக முஸ்லிம்களை அச்சுறுத்துகிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? நீங்கள் ஏன் வெட்கமின்றி இதையெல்லாம் அனுமதிக்கிறீர்கள்? வளம், வளர்ச்சி, வேலைவாய்ப்பை வைத்து ஓட்டு கேட்க எப்படி மனசு வருகிறது? இன்னும் எவ்வளவு தூரம் தரம் குறைந்து போவீர்கள்? ' என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.kushboo speaks against menaka gandhi

இந்நிலையில், இந்த சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மேனகா காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவ்விவகாரத்தில் விளக்கம் அளிக்க மேனகா காந்திக்கு மூன்று நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios