100 முறை குளித்தாலும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருப்பாகத்தான் இருப்பார் என கர்நாடக முன்னாள் எம்.எல்.ஏ ராஜூ கேஜ் விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கேமரா முன்பு தோன்றுவதற்கு முன்னர் மோடி மேக்கப் செய்து கொள்வதாகவும், நாளொன்றுக்கு 10 ஆடைகளை அவர் மாற்றிக் கொள்வதாகவும் கர்நாடக முதலமைச்ச குமாரசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள கக்வாத் தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ கேஜ், ’’மோடி பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், நன்றாகவும் இருக்கிறார்.

அதனால் அவர் மேக்கப் செய்து கொள்வதில்லை. கருப்பாக இருக்கும் குமாரசாமி, 100 முறை குளித்தாலும் கருப்பாகத்தான் இருப்பார்’’ என ராஜூ கேஜ் கூறியுள்ளார். அவரின் இந்த விமர்சனம் கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது