Asianet News TamilAsianet News Tamil

தவழ்ந்து வந்தவர்கள் எல்லாம் உழைப்பு பத்தி பேச தகுதியே இல்லை.. ஸ்டாலினுக்காக வரிந்து கட்டும் KS.அழகிரி.!

 பொய் பேசுவதில்  ஸ்டாலினுக்கு நோபல் பரிசும், உதயநிதிக்கு டாக்டர் பட்டமும் கொடுக்கலாம். திமுக இனிவரும் 4 ஆண்டு கால ஆட்சியில்  நாமத்தை மட்டுமே போடுவார்கள்.  மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார்கள். மேலும் பேச்சின் உச்சகட்டமாக தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டு வருகிறார்.

KS Alagiri Slams Edappadi Palanisamy
Author
Tamil Nadu, First Published Feb 12, 2022, 1:00 PM IST

முதல்வரை விமர்சிக்கும் முன் தான் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதால் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக தரப்பில் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பிரச்சாரத்திற்கு போகும் இடமெல்லாம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.

KS Alagiri Slams Edappadi Palanisamy

குறிப்பாக மக்களை பற்றி முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை. எதை செய்தாலும் முதல்வர் தன்னை விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பொய் பேசுவதில்  ஸ்டாலினுக்கு நோபல் பரிசும், உதயநிதிக்கு டாக்டர் பட்டமும் கொடுக்கலாம். திமுக இனிவரும் 4 ஆண்டு கால ஆட்சியில்  நாமத்தை மட்டுமே போடுவார்கள்.  மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமாட்டார்கள். மேலும் பேச்சின் உச்சகட்டமாக தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்தார். 

KS Alagiri Slams Edappadi Palanisamy

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, "தவழ்ந்து வந்தவர்கள் எல்லாம் உழைத்து வந்தவர்களை பார்த்து பொம்மை என்று சொல்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. முதல்வரை விமர்சிக்கும் முன் தான் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios