k.p.munusamy press meet

இணக்கமான சூழ்நிலை இருந்ததால்தான் பேச்சுவார்த்தை…தொடர்ந்து ஆப்படிக்கும் கே.பி.முனுசாமி…

நல்ல ஒரு இணக்கமான சூழ்நிலை இருந்தால்தான் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேய்ஸ் சாலை ஓபிஎஸ் இல்லத்தில் இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரன் மிகப்பெரிய தவறை செய்துள்ளார் என தெரிவித்தார்.

எம்ஜிஆர் மறைந்தபோது கூட இது போன்ற அசாதாரண சூழ்நிலை இருந்தததில்லை என கூறிய கே.பி.முனுசாமி, அப்போது கூட கட்சியைக் காப்பாற்ற ஜானகி அம்மாள் ஒதுங்கிக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

சசிகலா குடும்பத்தை கட்சியை வெளியேற்ற வேண்டும், ஜெ, மர்ம மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்றிவிட்டால் நாங்கள் இருவரும் அண்ணன், தம்பிகள்தான் என்றும் கே.பி.முனுசாமி கூறினார். அதே நேரத்தில் ஒரு இணக்கமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே அணிகள் இணைப்பு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

தங்களது கோரிக்கைகளை ஏற்று ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா மற்றும் தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டதை வரவேற்பதாகவும் கே.பி.முனுசாமி தெ