Asianet News TamilAsianet News Tamil

திமுகவின் திட்டங்களை எடப்பாடிக்கு பாஸ் செய்யும் கொங்கு கோட்டை கோமகன்... அதிர்ச்சியில் செந்தில் பாலாஜி..!

எப்படியாவது கொங்கு கோட்டையை பிடித்தாக வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகளை வளைத்தது தி.மு.க. தலைமை. அப்படி வளைக்கப்பட்ட நிர்வாகிகளில் ஒருவர் திமுகவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். 

Kongu Kottai sindhu Ravichandhran who passes DMK's plans to Edappadi ... Senthil Balaji in shock ..!
Author
Tamil Nadu, First Published Dec 3, 2021, 11:08 AM IST

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தி.மு.க. அபார வெற்றி பெற்றாலும், கொங்கு மண்டலத்தில் கோட்டை விட்டது. எப்படியாவது கொங்கு கோட்டையை பிடித்தாக வேண்டும் என்று முக்கிய நிர்வாகிகளை வளைத்தது தி.மு.க. தலைமை. அப்படி வளைக்கப்பட்ட நிர்வாகிகளில் ஒருவர் திமுகவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். இது பற்றி கொங்கு மண்டலத்தில் பல ஆண்டுகாலமாக தி.மு.க.விற்கு விசுவாசமாக இருக்கும் தி.மு.க.வினரிடம் பேசினோம்.Kongu Kottai sindhu Ravichandhran who passes DMK's plans to Edappadi ... Senthil Balaji in shock ..!

‘‘சார்... நீங்கள் கேட்ட கேள்வி உண்மைதான். கோவை மாவட்டத்தை கைப்பற்ற முடிவெடுத்த முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமித்திருக்கிறார். இது வரவேற்கக்கூடிய விஷயம். அவரும் திறமையான மனிதர்.  ஆனால், கோவை மட்டுமே கொங்கு மண்டலம் ஆகிவிடாது. ஈரோடு மாவட்டத்திலும் தி.மு.க. பல இடங்களில் தோல்வியை தழுவியது. ஈரோடு மாவட்டத்தைக் எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்திருக்கிறார்.

அதாவது, இவருக்கும், ஈரோட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு வெவ்வேறு வேலைகள் செய்து கொடுத்து, ஈரோட்டில் காலுன்றி கொங்கு மண்டலத்தில் காலூன்ற நினைப்பவர். அடுத்து, ஈரோடு மாவட்டச் செயலாளராக வேண்டும் என்ற எண்ணத்தில், தற்போதைய அமைச்சர் முத்துச்சாமிக்கே பல வழிகளில் மறைமுகமாக, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்.Kongu Kottai sindhu Ravichandhran who passes DMK's plans to Edappadi ... Senthil Balaji in shock ..!

கடந்த ஆட்சியில் செங்கோட்டையனிடம் பல கோடி ரூபாயை ஆட்டையைப் போட்ட சிந்து ரவிச்சந்திரன்தான் தற்போது, கே.சி.கருப்பண்ணணுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தி.மு.க.வில் நடக்கும் விஷயங்களை சொல்லி வருகிறார்.  உண்மையிலேயே இவர் தி.மு.க.தானா என்பதை அவர் மனசாட்சியிடம்தான் கேட்க வேண்டும்!

சிந்து ரவிச்சந்திரனுக்கு பாலமாக இருப்பவர், தென் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வில் இருக்கும் இரு அமைச்சர்களுக்கு பாலமாக இருப்பவர். இவர்தான் தமிழகத்தின் சிறந்த பத்திரிகையாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதை நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டாம். இவர் எந்த கட்சிக்கு டி.வி.சேனல்களில் பேச ஆரம்பித்தாரோ அந்தக் கட்சிக்கு விசுவாசமாக இல்லை. Kongu Kottai sindhu Ravichandhran who passes DMK's plans to Edappadi ... Senthil Balaji in shock ..!

தற்போது, ‘மருமகனை’ கையில் வைத்து இவரும் ஒரு ‘வியாபாரி’யாக மாறியிருக்கிறர். இதெல்லாம் திராவிட கட்சிகளின் தலைமைகளுக்கு நன்றாக தெரியும். தற்போது ஈரோடு மாவட்டச் செயலாளராக எனது பெயரை அறிவிக்கப் போகிறார்கள் என்று சொல்லி வருகிறார் சிந்து ரவிச்சந்தின். அதே போல், செங்கோட்டையனிடம் எப்படி சம்பாதித்தாரோ, அதே போல், செந்தில் பாலாஜியிடம் பல கான்டிராக்டர்களை அறிமுகப்படுத்தி இப்போதே பல கோடிகளை கல்லா கட்டி விட்டார். இதெல்லாம் அன்பில் மகேஷுக்கு தெரியுமா? இல்லை அவரது பெயரை தவறாக பயன்படுத்துகிறாரா என்பதை முதல்வர்தான் முடிவு செய்யவேண்டும்’’ என்றனர்.

தி.மு.க.வில் இனி இவரைப்போன்றவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே ஈரோடு உ.பி.க்களின் கோரிக்கையாக இருக்கிறது!

Follow Us:
Download App:
  • android
  • ios