கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்த உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். 

கொடநாடு இல்லத்தில் 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொள்ளக்காக திட்டமிட்டது பற்றி தெரிவிக்கின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

 

மேலும் கொடநாடு சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்ட படுகொலை என்றும் பகீர் தகவலை வெளியட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தைலைவர்களும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தெரிவித்துள்ளார். மேலும் நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.