தினகரனின் வளர்ச்சி அதிமுகவிற்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியாகவே இருக்கிறது தினகரனின் வளர்ச்சியும் அவர் நடத்திக் கொண்டிருக்கும் அரசியலும். அதனால் தான் என்னவோ, தினகரனின் வலது கையாகவும், சசிகலா குடும்பத்தில் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த செந்தில் பாலாஜியை ஸ்கெட்ச் போட்டு திமுகவிற்கு தூக்கினார்கள்.

ஆனாலும், தினகரனோ கொஞ்சமும் கலங்காமல் தில்லாகவும், வழக்கமான தனக்கே உரிய கூலாக கையாண்டார். எங்கிருந்தாலும் வாழ்க என ஒரே பதிலளித்தார். அதுமட்டுமல்லாமல், எங்கள் கட்சி உறுப்பினர் திமுகவில் சேர்வதற்கு கூட விழா எடுக்கிறார்கள். அந்த அளவிற்கு திமுகவின் நிலை சென்றுவிட்டது என கூறினார்.

தினகரன் சொன்னதைப்போலவே, திமுக அமமுகவின் வளர்ச்சியால் டரியலில் இருப்பது கே.என்.நேரு வீடியோ அம்பலப்படுத்தியிருக்கிறது. 

அண்ணா சிலைக்கு மாலை போட திமுக, அதிமுக எல்லாம் 100 பேர தான் கூட்டுவோம். ஆனால், இந்த டிடிவி தினகரன் மட்டும் 1000 பேர  கூட்டி காட்டுறார் என  திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு தனது ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது தினகரனை பார்த்தால் திமுக மிரளுது  நங்காவே தெரிகிறது என சமூக வலை தளங்களிலும், அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, தினகரனைப் பற்றி பேசும் கே.என்.நேரு, தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து வந்ததில் டீல் பேசி முடித்த டீமில் கே.என்.நேரு முக்கிய நபர் என்பது குறிப்பிடதக்கது.