சமூக வலைதளங்களில் பெண்பத்திரிக்கையாளர்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பிரபல சமூகவலைதள செயல்பாட்டாளர் கிஷோர் கே.சாமி கைதாகி சில மணிநேரங்களிலேயே வெளியே வந்தார்.

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு கட்சியினரையும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக பெண் பத்திரிக்கையாளர் மையம் சார்பாக காவல்துறை ஆணையளாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.  இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த சைபர் க்ரைம் போலிஸார் கிஷோர் கே சுவாமியை இன்று கைது செய்தனர்.

அவரிடம் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையறிந்த பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் க்ரைம்போலீஸார் அலுவலகத்தில் ஒன்று திரண்டு தங்களது பலத்தை காட்டி கிஷோர் கே.சுவாமியை கைதிலிருந்து விடுவித்து மீட்டனர். 

தற்போது வெளியே வந்துள்ள கிஷோர் கே.சுவாமிக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களிலேயே அவர் வெளியேறியதால் புகார் கொடுத்த பெண் பத்திரிக்கையாளர்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்து வருகின்றனர்.