Asianet News TamilAsianet News Tamil

அட்டைக்கத்தி ஸ்டாலின் தளபதின்னா அன்னப்பூரணியும் அம்மன் தான்.. திமுகவை வம்பிழுக்கும் கிஷோர் கே சாமி..!

கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம் கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து கிஷோர் கே சுவாமி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்து வந்ததும் திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார். 

kishore k swamy criticzing mk stalin
Author
Tamil Nadu, First Published Dec 27, 2021, 1:24 PM IST

பெரியார், திராவிட அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்ட வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்த கிஷோர் கே சாமியை சமீபத்தில் நீதிமன்றம் விடுதலை செய்யப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார். 

கடந்த முறை அதிமுக ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு வந்தார். அதிமுக, பாஜக ஆதரவு இருந்ததால்  கிஷோர் கே சாமி மீது பல்வேறு புகார்கள் இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.  ஆட்சி மாறினாலும் திமுக அரசை  கிஷோர் கே சாமி தொடர்ந்து விமர்சித்து வந்தார். குறிப்பாக பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்து பதிவிட்டு வந்தார். இதனையடுத்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஜூன் 10-ம் தேதி புகார் அளித்தார்.

kishore k swamy criticzing mk stalin

இதனையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து கிஷோர் கே. சாமியை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சைதாப்பேட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக 2வது முறையாக கைது செய்யப்பட்டார். தொடந்து கிஷோர் கே சாமி மீது அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவரை குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். 

kishore k swamy criticzing mk stalin

இதையடுத்து கிஷோர் கே சாமி ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அறிவுரை கழகத்தில் கிஷோர் கே சாமி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த அறிவுரைக்கழகம் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது.

kishore k swamy criticzing mk stalin

இந்நிலையில் தன் மீதான விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் கிஷோர் கே சுவாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 23ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம் கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து கிஷோர் கே சுவாமி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்து வந்ததும் திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியிருக்கிறார். 

 

 

இது தொடர்பாக பாஜக ஆதரவாளராக அறியப்படும் கிஷோர் கே சாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்;- அட்டைக்கத்தியெல்லாம் தளபதின்னா  அன்னப்பூரணியும் அம்மன் தான் என்று பதிவிட்டுள்ளார். கருணாநிதி கதை வசனத்தில் வெளியான பாராசக்தி படத்தை பதிவிட்டுள்ளார்.  சிறையில் இருந்து வந்ததுமே முதல்வர் ஸ்டாலினை மறைவாக தாக்கி விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார்.. அவரது பதிவுகளை பாஜக வரவேற்று வரும் நிலைில் திமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios