தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிடைந்ததும் ஆந்திர மாநில கவர்னராக கிரண்பேடி நியமிக்கப்படவுள்ளதாக ததகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உதயமானது. இரு மாநிலத்துக்கும் கவர்னராக நரசிம்மன் உள்ளார். பொது தலைநகராக ஐதராபாத் இருக்கிறது.

அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்துக்கு தனி கவர்னர் நியமிக்கப்பட வேண்டும் என்று  தெலுங்கு தேசம், ஒஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவர்னர் நரசிம்மன் தெலுங்கானாவில் உள்ள ஐதராபாத்திலேயே இருப்பதால் ஆந்திராவுக்கு புதிய கவர்னரை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று  வலியுறுத்தி  வருகின்றனர்.

இந்த  நரசிம்மன் தெலுங்கானா மாநிலத்துக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும், ஆந்திராவை பாரபட்சத்துடன் நடத்துவதாகவும், ஆந்திர அரசு மத்திய அரசிடம்  ஏற்கனவே புகார் செய்து இருந்தது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் மத்திய பாஜக அரசில் இருந்து ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் வெளியேறியது.  கூட்டணியையும் தெலுங்கு தேசம் முறித்துக் கொண்டது.

இதற்கிடையே ஆந்திர மாநிலத்திற்கு புதிய கவர்னராக தற்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

தற்போது ஆந்திராவில் நிலவும் அரசியல் சூழ்நிலையை கிரண்பேடி திறம்பட சமாளிப்பார் என்று மத்திய அரசு நினைப்பதால் அவரை ஆந்டிதர கவர்கனர் ஆக நியமிக்க மத்திய அரசு நினைக்கிறது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடிக்கும் முதலமைச்சர்  நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் இடையே  குடும் மோதல் ஏற்பட்டள்ளது.

தற்போது மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் சந்திர பாபுநாயுடுக்கு செக் வைக்கவே கிரண் பேடி ஆந்திர ஆளுநராக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.