Asianet News TamilAsianet News Tamil

அரியர் மாணவர்களின் அரசனே..! மாணவர்கள் மனதில் ஒட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி..!

அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கட்ஆவுட் வைத்து அசத்தியுள்ளனர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்.
 

King of arrear students ..! Edappadi Palanisamy stuck in the minds of students
Author
Tamil Nadu, First Published Aug 27, 2020, 12:27 PM IST

அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து கட்ஆவுட் வைத்து அசத்தியுள்ளனர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள்.King of arrear students ..! Edappadi Palanisamy stuck in the minds of students

கொரோனாவால் உலகமே திண்டாடி வரும் நிலையில் மாணவர்களுக்கு மட்டும் ஒரே கொண்டாட்டம்தான். ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது. கோடை விடுமறை குறைவாகத்தான் கிடைக்குமோ என்ற ஏக்கத்துடன் இருந்த சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் நீண்ட விடுமுறையை கேட்டு மகிழ்ச்சியின் ஆராவாரத்தில் ஆர்பரித்துப்போயினர்.

 

இந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. மாணவர்கள் தேர்வு எழுத வரமுடியாத சூழல் நிலவியது இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த செய்தியை கேட்டு, வயிற்றில் பாலை வார்த்த “எங்கள் தெய்வமே” என முதலமைச்சர் பழனிசாமிக்கு மாணவர்கள் தீபாராதனை காண்பித்து நன்றி செலுத்தினர்.King of arrear students ..! Edappadi Palanisamy stuck in the minds of students

இந்த சூழலில் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என நேற்று மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.இந்நிலையில், அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஈரோடு அருகே கொல்லம்பாளையத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கல்லூரி மாணவர்கள் பதாகைகள் வைத்துள்ளனர். ஈரோடு மாவடத்தின் பல்வேறு இடங்களில் “அரியர் மாணவர்களின் அரசனே நீ வாழ்க ” என கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios