தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஏழு வண்ணங்களில் குடிமகன்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த டோக்கன் அடிப்படையிலேயே மதுபானம் வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.டாஸ்மாக் விற்பனை இன்று தொடங்கியது.

 தமிழகம் முழுவதும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் அரசாங்கம் நினைத்த அளவிற்கு கூட்டம் குறைவாகவே இருக்கிறது. குடிமகன்களிடம் வாங்கும் திறன் குறைந்திருப்பதாகவே அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கான காரணம் என்று பார்த்தால் 'வேலைவாய்ப்பு இல்லாமல் இரண்டு மாதங்களாக வீட்டிற்குள் முடங்கி கிடந்தது தான்' என்கிறார்கள். ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படுமாம். நேரத்தின் அடிப்படையில் அதாவது 1மணிநேரம் அல்லது 2மணிநேரம் எனக் கணக்கிடப்பட்டு 70 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.காலையில்இருந்தே குடிமகன் மதுபாட்டில்களை வாங்க மாஸ்க் அணிந்து வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களை ஒழுங்கு படுத்தும் பணியினை போலீஸார் செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் 144தடை உத்தரவு இன்னும் நீக்கப்படவில்லை.கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மது குடித்தால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறை என்று மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு பெற்று மதுக்கடைகளை திறந்தது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை டாஸ்மாக் கடைகள் கடைப்பிடிக்கவில்லை என்று அதற்கான வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து டாஸ்மாக் கடைகள் திறக்க தடை உத்தரவு பெற்றார் வழக்கறிஞர் ராஸேஷ். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அந்த மனுமீதான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சில நிபந்தனைகளோடு டாஸ்மாக் கடை திறக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தடைக்கு தடை போட்டது உச்சநீதிமன்றம்.குடிமகன்கள் ஆதர்அட்டை கொண்டு வரவேண்டாம். ஏழு நாளும் ஏழு வண்ணங்கள் வழங்க வேண்டும்.அதை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்படும் நேரத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடாதவண்ணம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கிலும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனையை தொடங்கிவிட்டார்கள். 7ம் தேதி மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட நாளன்று தமிழகத்தில் நடைபெற்ற குற்றங்கள் பாலியல் சம்பங்கள் தமிழகத்தில் தலைவிரித்தாடியது நினைவிருக்கலாம்.