காங்கிரஸ் பூதங்களும் ஊமை என்பதை நிரூபிக்க வேண்டாம் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கொந்தளித்துள்ளார்.

குஷ்பு சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதே நேரம் தன்னை விமர்சிப்பவர்களுக்கு தடித்த வார்த்தைகளைக் கொண்டு பதிலடி கொடுப்பார். அப்படி காங்கிரஸ் அபிமானி ஒருவர்’’காங்கிரசில் இருக்கும் போது தேர்தல் பிரச்சாரத்துக்கு காசு கேட்ட மாதிரி, பிஜேபியிலும் வேல் யாத்திரைக்கு காசு கேட்டிங்களாமே உண்மையா? முருகனும் மத்த சீனியர்களும் உங்க மேல செம்ம காண்டுல இருக்காங்களாமே. அடுத்த கட்சி ஆபிஸ் போக பெட்டியை ரெடி பண்ணிட்டிங்களா?’’என குஷ்புவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.  

அதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, ‘’டேய் லூசுத் தம்பி... ராகுல்காந்தியிடம் போய் கேள். 6 வருடங்களுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடக்கிறது. அவர் எனக்கு பணம் கொடுத்தால் அல்லது எல்லோரும் உங்களைப் போன்றவர்கள் என்று நீங்கள் நினைத்தால், பணத்தால் வாங்க முடியுமா ?? காங்கிரஸ் பூதங்களும் ஊமை என்பதை நிரூபிக்க வேண்டாம்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.