குஷ்புவிற்கு வயதாகிவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு,  தெர்மகோல் விஞானி பாவம் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார் என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

குஷ்புவிற்கு வயதாகிவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு, தெர்மகோல் விஞானி பாவம் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார் என குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வாக்கு சேகரித்த செல்லூர் ராஜூ, ’’மதுரையில் எருமை குளித்தாலும் கூட்டம் கூடும். நடிகர்களுக்கு கூடுவதில் ஆச்சரியமில்லை. நடிகர் வடிவேலுக்கு கூடாத கூட்டமா? கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. குஷ்பு இளமையாக இருந்த போது கோவில் கட்டினர்.

ஆனால், அதே குஷ்பு திமுகவிற்காக ஓட்டு கேட்ட போது யாரும் ஓட்டு போடவில்லை. இப்போது குஷ்புவிற்கு வயதாகி வருகிறது. எனவே அவரது பிரசாரத்தை கேட்டு மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்து இருந்தார்.

Scroll to load tweet…

இதனை அறிந்த குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், ’’அதிமுகவின் விஞ்ஞானி தெர்மகோல் ராஜூவிற்கு வயதாகி விட்டதுனு நல்லா தெரியுது. பாவம் என்னமோ பேசிக்கொண்டு இருக்கிறார். 30-வருடம் கடந்தும் எனது பிரசாரத்திற்கு கூட்டம் அதிக அளவில் வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார்.