Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்க்காதீங்க... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குஷ்பு ட்வீட்..!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
 

Khushbu request to Chief Minister Edappadi Palanichamy not to oppose the opening of the Sterlite plant..!
Author
Chennai, First Published Apr 23, 2021, 9:25 PM IST

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சம் கடந்துவிட்டது. சராசரியாக தினமும் 2,000 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆக்சிஜன் போதிய அளவு இல்லாமல் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கிறார்கள். இதனால், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் கிடைக்காத நிலையில், அதற்கு தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.Khushbu request to Chief Minister Edappadi Palanichamy not to oppose the opening of the Sterlite plant..!
எனவே, பல நிறுவனங்களும் ஆக்சிஜன் தயாரிக்க முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்ரெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி அந்நிறுவனம் அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், ஸ்ரெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மக்கள் ஆபத்தில் இருக்கும்போது ஆலையை ஏன் திறக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி நீதிமன்றம், வழக்கை 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. Khushbu request to Chief Minister Edappadi Palanichamy not to oppose the opening of the Sterlite plant..!
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவருடைய பதிவில், “நமக்கு ஆக்ஸிஜன் தேவை. உயிர்களை காக்க ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்றால் அது நடக்கட்டுமே. தற்போது உயிர்களை காப்பதே நம் முக்கிய நோக்கம். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என முதல்வர் பழனிசாமியை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios